கோவையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிய மேயர்!

கோவை மாநகராட்சி அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில் 65 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட 65 மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் கல்பனா உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ இன்று (14.02.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப்‌, துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.

இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய 65 மனுக்களை மேயரிடம் வழங்கினர்.



இந்த கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ மாணிக்கம், மோகனசுந்தரி, சேகா்‌, முத்து ராமலிங்கம்‌, மகேஷ் கனகராஜ்‌ (பொ), உதவி ஆணையர் (நிர்வாகம்) சரவணன், உதவி ஆணையர் (வருவாய்‌) செந்தில்குமார் ரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தர்ராஜ்‌, உதவி செயற் பொறியாளார்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...