ஊட்டி ஒன்றியத்தில் குடிநீர் விவசாய நிலங்களுக்கு விற்பதாக பொதுமக்கள் புகார்

உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர் மலை மற்றும் கல்லட்டி பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரை ஆபரேட்டர்களின் உதவியுடன் விவசாயத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


நீலகிரி: அழகர் மலைப்பகுதிக்கு மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட அழகர் மலை மற்றும் கல்லட்டி பகுதிகளுக்கு இடைப்பட்ட விவசாய நிலங்களில், பிரதம மந்திரியின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வந்தது.

தற்போது பணிகள் முடிவடைந்து, அழகர் மலைப்பகுதிக்கு மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் வழங்குவதில்லை. மாறாக இப்பகுதியில் பணிபுரியும் குடிநீர் பம்பு ஆபரேட்டர்களின் உதவியுடன் பைக்காரா கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர், விவசாய பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் எடுப்பதால் அழகர் மலைப் பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம்,தண்ணீரை குடிநீராக மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...