விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு - கோவை ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு!

ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஆதரவாக விவசாய நிலங்களை இருகூர் பேரூராட்சி நிர்வாகம் கையகப்படுத்துவதாக கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாழைத்தார், தென்னங்குருத்து, மட்டை ஆகிய பொருட்களுடன் போராட்டம் நடத்தினர்.



கோவை: இருகூர் பேரூராட்சி நிர்வாகம் மீது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் பழனிசாமி, இருகூர் பேரூராட்சியில் விவசாயம் செய்துவரும் நிலத்திற்கு அருகில் சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இடத்தை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக 30 அடி உள்ள சாலையை விரிவுபடுத்த இருகூர் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறது எனவும் குற்றம்சாட்டினார்.



மேலும், இதற்காக தென்னை மரங்களை வெட்ட வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் மரங்களில் அம்புக்குறியிட்டு சென்றுள்ளதாகக் கூறிய பழனிசாமி, பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை அவர்கள் கூறிவருவதாகவும் தெரிவித்தார்.



கோரிக்கையே இல்லாமல் சாலையை விரிவுபடுத்த தன்னிச்சையாக முயற்சிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...