தேவாலயதில் கையாடல் செய்த வழக்கில் பாதிரியாருக்கு சிறை தண்டனை வதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு



கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள சிட்ரா அருகிலுள்ள புனித செபாஸ்டின் ஆலையம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பள்ளியில் இருந்து கையாடல் செய்த வழக்கில் பாதிரியார் ஜான்பாஸ்கோ என்பவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 21 லட்சம் அபராதம் விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு.

ஜான்பாஸ்கோ, 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஆலையத்தில் பணியாற்றிய காலத்தில் ரூ.10 லட்சத்து 94 ஆயிரத்து 668 கையாடல் செய்ததாகவும், மேலும் வரவு செலவு கணக்குகளை மறை மாவட்டத்திற்கு அறிவிக்காமல் சொத்து சேர்த்ததாகவும் ஜெரால்ட் பூபாலன் என்பவர் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் 2010ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதத் தொகையை புனித செபாஸ்டின் ஆலையத்திற்கு வழங்கவும் நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...