உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 2ம் கட்ட மேம்பால பணிகள் 80 சதவீதம் நிறைவு!

பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ள கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.


கோவை: உக்கடம்-ஆத்துப் பாலம் இடையே இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் 80 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம் ஆத்துப்பாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.

இந்த மேம்பால பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால், பொள்ளாச்சி, மற்றும் பாலக்காடு, கேரளமாக பயணிப்பவர்களுக்கும், கோயமுத்தூர் தெற்கு மார்க்கமாக இருந்து கோவை மாநகரம் நோக்கி பயணிப்பவர்களுக்கு இலகுவான பயணம் அமையும்.



இந்நிலையில் முதல் கட்டமாக, உக்கடம் - ஆத்துப்பால மேம்பால கட்டுமான பணிகள் நடந்து முடிந்துள்ளன. உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகளும் விறு விறுப்பாக நடந்து வருகிறது.



இந்த நிலையிலே ரூ.265.44 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட மேம்பாலம் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணி நீட்டிப்பின் மூலம் ஆத்துப்பாலத்தினை கடந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இறங்கும் வகையிலும், உக்கடம் சந்திப்பில் திருச்சி சாலைக்கு செல்லும் வகையில் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால நீட்டிப்பு மூலம் 2.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உக்கடம் -ஆத்துப் பாலம் இடையே முதல் கட்ட மேம்பால பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் 70-80% நிறைவடைந்துள்ளது. உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையில் இரண்டு இடங்களில் ஏறுதளமும், இரண்டு இடங்களில் இறங்குதளமும் அமைக்கப்படுகிறது. மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கையிலும் எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...