'ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை..!' - டி.டி.வி தினகரன் அறிவிப்பு

எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததாலும், ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்காது என்றும் இரட்டை இலைக்கான சக்தி இனி இல்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.



சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. என்னிடம் யாரும் பேசி அ.ம.மு.க. வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை. ஈரோடு கிழக்கில் ஜெயிப்போம் என நம்பியதைவிட நல்ல வாக்கு சதவிகிதத்தை பெறுவோம் என நம்பினோம். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் இல்லாததால் போட்டியில்லை. குக்கர் சின்னம் இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே போட்டியிடவில்லை. 

இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும். ஈரோடு கிழக்கில் தீய சக்திகளுக்கு, துரோக சக்திகளுக்கு அமமுக ஆதரவு அளிக்காது. 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அ.ம.மு.க. போட்டியிடும். இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம் என்றார். 

தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், இடைத்தேர்தலில், அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் அவர்கள் வென்றுவிடுவார்களா? அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களுக்கே இல்லை. 

தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமெனில் அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்து செயல்பட வேண்டும். ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று நான் கூறவில்லை, ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறினேன். 

தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை அதிகமாக செலவு செய்கிறது. ஓ.பி.எஸ். எனது நண்பர் மற்றும் அவர் மீது எனக்கு தனிப்பிரியம் உண்டு. நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் தேர்தல் ஆணையம் மட்டுமே, எந்த அரசியல் காரணமும் இல்லை. 

எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததாலும் வெற்றி இல்லை. இரட்டை இலைக்கான சக்தி இனி இல்லை, ஏனென்றால் அது தவறான நபர்களின் கையில் உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...