வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கோவையில் தனியார் நிறுவனம் மோசடி

கோவை மாவட்டம், வடகோவையில், ஏர்குளோபல் ராஜ்டூர் என்ற பெயரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தினர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த கோவை புலியகுளத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், ஆலாந்துறையை சேர்ந்த மாரிமுத்து, மலுமிச்சம்பட்டியை சேர்ந்த இந்துஜா ஆகியோர், இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வடகோவையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர்கள் சென்றபோது, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பணம் செலுத்துமாறு நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதன்படி, சந்தோஷ்குமார் 3.30 லட்சம் ரூபாய், மாரிமுத்து 1.50 லட்சம் ரூபாய், சிந்துஜா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்து பல மாதங்களாகியும் வேலை எதுவும் பெற்றுத்தராமல் இருந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 3 பேரும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததைத்தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...