ஈரோட்டுக்கு சென்ற ஆதியோகி ரத யாத்திரை - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு சென்ற ஆதியோகி ரத யாத்திரையை ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டின் அருகிலேயே‌ கண்டு ரசித்து ஆதியோகியை நேரில் தரிசனம்‌ செய்தனர்.


கோவை:கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ஆதியோகி ரதத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ 'ஆதியோகி ரத யாத்திரை' ஆண்டுதோறும்‌ நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவ சிலையுடன்‌ கூடிய 5 ரதங்கள்‌ கடந்த மாதம்‌ கோவையிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின்‌ 4 திசைகளில்‌ பயணத்தைத் தொடங்கின.

அதில்‌ ஒரு ரதம்‌ பொங்கல்‌ தினத்தன்று ஈரோடு மாவட்டத்திற்கு சென்றது. பாரியூர்‌, சூரம்பட்டி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர்‌, ஆப்பகூடல்‌, கூகலூர்‌ என பல்வேறு இடங்களுக்குப் பயணித்து பிப்ரவரி 1ஆம்‌ தேதி கோபிக்கு வருகை தந்தது.



பல்வேறு கிராமங்களில்‌ வீதி வீதியாகச் சென்ற இந்த ரதத்திற்குப் பொதுமக்கள்‌ ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்‌. குறிப்பாக, வெளியூர்களுக்கு அதிகம்‌ பயணம்‌ செய்யாத கிராமப்புற மக்கள்‌, முதியவர்கள்‌ என பல தரப்பட்ட மக்கள்‌ தங்கள்‌ விட்டை தேடி ஆதியோகி வந்ததைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்‌.

கோபியிலிருந்து கொடிவேரி, அரசர்‌, பெருந்துறை, பங்களா புதூர்‌ போன்ற இடங்களுக்கு செல்லும்‌ இந்த ரதம்‌ பிப்ரவரி 10ஆம்‌ தேதி வரை ஈரோட்டு மாவட்டத்தில் இருக்கும்‌. பின்னர்‌, அங்கிருந்து கோவைக்குப் பயணிக்கும்‌.

இந்த யாத்திரையில்‌ பிப்ரவரி 18ஆம்‌ தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும்‌, கோபியில்‌ உள்ள லிங்க பைரவியிலும்‌ நடைபெறும்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...