ஒரிசாவில் இருந்து ரயிலில் கோவைக்கு கஞ்சா கடத்திச் சென்ற இருவர் திருப்பூரில் கைது - 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஒரிசாவில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு கஞ்சா கடத்தி சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.



திருப்பூர்: ஒரிசாவில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சாலை மார்க்கமாகவும் ரயில் போக்குவரத்து மூலமாகவும் கஞ்சா கடத்தல் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் பிளாட்பாரம் முடிவுறும் இடத்தில் இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து வந்துள்ளனர். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.



இதில் அவர்கள் கொண்டு வந்த பையில் பெரிய பிளாஸ்டிக் பொட்டலங்கள் இருப்பதை கண்ட போலீசார், அதனை சோதனையிட்டதில், அந்தப் பைகளில் கஞ்சா இருந்ததும் வாசம் தெரியாமல் இருக்க பிளாஸ்டிக் டேப்பை கொண்டு முழுவதும் சுற்றி இருந்ததும் தெரியவந்தது.



இதையடுத்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மதுவிலக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.



மேலும் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த முகமது ரகுப்(22) மற்றும் அல்தாப்(19) என தெரிய வந்தது.

மேலும், ஒரிசா மாநிலம், பிரம்மப்பூர் பகுதியில் இருந்து கேரளா செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்திச் சென்று கோவையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க இருந்துள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் அதிக அளவு பாதுகாப்பு இருப்பதால் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் திருப்பூரில் இறங்கி பேருந்து மூலம் கோவை செல்ல திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...