உடுமலை உழவர் சந்தை - ஜனவரி மாதத்தில் ரூ.2.24 கோடிக்கு காய்கறிகள் பழங்கள் விற்பனை!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ.2 கோடியே 24 லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.2 கோடியே 24 லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை ஆகியுள்ளது.

விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களே நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனைத்துறை மூலம் உழவர் சந்தைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இதன்மூலம் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் உடனுக்குடன் பொதுமக்களுக்கு சென்று சேர்வதால் ஆர்வத்துடன் உழவர் சந்தைகளை தேடி மக்கள் அதிகளவில் வருகின்றனர். அந்த வகையில் உடுமலை கபூர்கான் வீதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டுவந்த விற்பனை செய்து வருகின்றனர்.

அதிகாலையில் செயல்படத் தொடங்கும் உழவர் சந்தை பலருக்கு நடைபயிற்சியின் போது காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை வாங்க வசதியான மையமாக உள்ளது.



கடந்த ஜனவரி மாதத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு 2 ஆயிரத்து 374 விவசாயிகள் கொண்டு வந்த 8 லட்சத்து 36 ஆயிரத்து 955 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களை 90 ஆயிரத்து 91 பேர் வாங்கியுள்ளனர். அந்தவகையில், ஒரு நாளைக்கு சராசரியாக 3 ஆயிரம் பொதுமக்கள் உழவர் சந்தையை பயன்படுத்தியுள்ளனர்.

விற்பனையான மொத்த காய்கறிகள் மற்றும் பழங்களின் மதிப்பு ரூ.2 கோடியே 24 லட்சத்து 36 ஆயிரத்து 825 ஆகும். இது முந்தைய டிசம்பர் மாதத்தை விட ரூ. 33 லட்சத்து 98 ஆயிரத்து 70 அதிகம் ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2 ஆயிரத்து 215 விவசாயிகள் கொண்டு வந்திருந்த ரூ.1 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரத்து 755 மதிப்பிலான 7 லட்சத்து 57 ஆயிரத்து 905 கிலோ காய்கறிகள் விற்பனை ஆகியிருந்தது. அதனை 84 ஆயிரத்து 215 பேர் வாங்கி பயனடைந்திருந்தனர்.



கடந்த மாதத்தில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உழவர் சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ. 24-க்கும், கத்தரிக்காய் ரூ.18- க்கும், புடலங்காய் ரூ.20, பீர்க்கங்காய் ரூ.35, பாகற்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.18, மிளகாய் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.26, முருங்கைக்காய் ரூ.70 என்ற விலையில் விற்பனையானது. வெண்டைக்காய் வரத்து குறைவாக இருந்த நிலையில் ஒரு கிலோ ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ. 55 வரை விற்பனையானது.

உடுமலை உழவர் சந்தைக்கு பொதுமக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சந்தை வளாகத்தில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...