லிட்ரரி ஃபியஸ்டா என்ற ஆங்கில மொழி இலக்கிய விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இலக்கிய மற்றும் நுண்கலை மன்றத்தின் சார்பில் லிட்ரரி ஃபியஸ்டா என்ற ஆங்கில மொழி இலக்கிய விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் மூலம் திறன்சார்ந்த கற்றலின் தேவையே மையக்கருவாக கொண்டிருந்தது.



இவ்விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் எம்.ஆனந்தி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் கே.சித்ரா தலைமையுரை வழங்கினார். அப்போது அவர், ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தையும், அது வேலைவாய்ப்புகளில் கொண்டுள்ள முக்கியப் பங்கையும் விளக்கினார்.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குமரகுரு கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் கே.தேவதாஸ் பேசுகையில், அன்றாட வாழ்வில் அனைவருக்குமான ஆங்கிலம் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு ஆங்கில மொழி எவ்வாறு உருவானது என்பது குறித்தும், அது எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதைக் குறித்தும் உரையாற்றினார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கேளிச்சித்திரம் மற்றும் ஓவியப் போட்டிகள் இக்கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த மாணவிகளுககாக நடத்தப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...