அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தான் ஆதரவு -சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி

ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எந்த தகுதியும் இல்லை எனவும், ஒ.பன்னீர்செல்வம் முதல்வாரக தொடர வேண்டுமென்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எந்த தகுதியும் இல்லை என தெரிவித்தார். ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டுமென்ற தங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு இப்படி தான் வர வேண்டுமென மக்கள் விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக உடையக்கூடாது என்பதற்காக தான் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் போது ஆதரவு அளித்ததாகவும், ஆனால் அன்றைய நிலை இன்று இல்லை எனவும் கூறிய அவர், பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தான் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும் நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருவார்கள் எனவும், கட்சி உடையக்கூடாது என விரும்பினால் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார். சசிகலாவிற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்த போது முன்கூட்டியே எடப்பாடி பழனிச்சாமியை ஏன் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், ஒ.பன்னீர்செல்வத்தை தவிர வேறு யாரையும் முதல்வராக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...