உடுமலை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சி அளித்ததாகப் பரவிய தகவலையடுத்து, அங்கு பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து, ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

அவ்வையாரால் அகத்தியரிடம் அறிமுகம்பெற்ற வாய் பேச முடியாத ராமதேவன் என்ற சிறுவன் அகத்தியரின் சீடரானார். தன் சமயோசித புத்தியால் காசிவர்மன் என்ற மன்னனின் தலைக்குள் இருந்த தேரையை வெளியேற்றியதால் அவர் தேரையர் என்று அழைக்கப்பட்டார்.



பின்னர், அகத்திய முனிவரால் பேசும் திறன்பெற்று நீண்ட காலம் மருத்துவ சேவை செய்து தேரை சித்தர் என்று பெயர் பெற்று, பொதிகை சார்ந்த தோரணமலையில் ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் உடுமலை குட்டை திடலில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர், தேரை வடிவில் காட்சியளிப்பதாகவும், அவரை தரிசித்தால் நோய்கள் தீரும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அந்த கோவிலில் உள்ள முருகன் சிலையின் வேலுக்கு இடையில் நீண்ட நேரமாக அந்த தேரை அசையாமல் அமர்ந்திருந்தது.

இவ்வாறு தேரை சித்தர் அவ்வப்போது காட்சியளிப்பதாகவும் திடீரென்று மாயமாக மறைந்து விடுவதாகவும் கூறி பக்தர்கள் வழிபட்டனர். விஞ்ஞானம் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில், சில நம்பிக்கைகள் மனிதர்களின் பல நோய்களுக்கு தீர்வாக இருப்பது வியப்புக்குரிய விஷயமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...