திருப்பூர் தாராபுரத்தில் ‘வருமுன் காப்போம்’ இலவச மருத்துவ முகாம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

திருப்பூர் அடுத்த செங்கோடம்பாளையம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கோடம்பாளையம் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.



பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 1996-ம் ஆண்டு 4-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றதும் வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்.



மருத்துவமனையில் மட்டுமே மருத்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல் கிராமப் புறங்களுக்கும் சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.



இதைத்தொடர்ந்து, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், கண்ணொளி காப்போம் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் நாகராஜ், செங்கோடம்பாளையம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...