கோவை கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோவை மாவட்ட அனைத்து கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி சங்க அலுவலகத்தில், அண்ணா கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் ஜி.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் கடுமையான மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மணல் விற்பனையாளர்கள் ஒரு யூனிட் மணலை ரூ 10,000ம் வரை விலையை உயர்த்தி விற்கிறார்கள். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலையோ ஒரு யூனிட் ரூ 650 மட்டும்தான். அத்துடன் லாரி வாடகையும் சேர்த்து கணக்கிடப்பட வேண்டும். ஆனால் வியாபாரிகள் மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி மணல் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளார்கள். 

எனவே, சமீப காலமாக நமது மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடப்பதில்லை. கட்டுமானப் பணிகள் நடக்காததால், தொழிலாளர்கள் வேலையின்றி பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் பட்டினி சாவுகள் கூட நிகழலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த விசயத்தில் அரசு உடனடியாக தலையிட்டு மணல் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலூக்கா தலைநகரங்களில் மணலை இருப்பு வைத்து அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்றும், கோரிக்கை நிறைவேறாத சூழ்நிலை நீடித்தால் வரும் மார்ச் 1ம் தேதி கோவை டவுன்ஹால் அருகில் உள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...