75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி கோவை சிறையில் இருந்த 13 கைதிகள் விடுதலை

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்த 60 கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை. கோவை சிறையில் இருந்து ஒரு பெண் உட்பட 13 பேர் விடுதலை.


கோவை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி கோவை உள்பட தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் உள்ள தண்டனை கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.



இந்நிலையில், தமிழக சிறை துறை டி.ஐ.ஜி. அம்ரேஷ் புஜாரி உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் இருந்து 11 கைதிகள், வேலூர் மத்திய சிறையில் இருந்து 9 பேரும், கடலூர் சிறையில் இருந்து 12 பேரும், திருச்சி சிறையில் இருந்து 9 பேரும், கோவை மத்திய சிறையில் இருந்து 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இதேபோல், மதுரை சிறையில் இருந்து ஒருவரும், பாளையங்கோட்டை சிறையில் இருந்து 4 பேரும், புழல் பெண்கள் சிறையில் இருந்து ஒருவரும், கோவை பெண்கள் சிறையில் இருந்து ஒருவரும் என மொத்தம் 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்டவர்களில் யாரும் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர் இல்லை என்றும், 66 சதவீத சிறை தண்டனையை அனுப்பித்தவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுதலையாகி வெளியே சென்றவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவன பங்களிப்போடு இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி அனுப்பி வைத்தனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...