'ஜன.31க்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' - தாராபுரம் கோட்ட மின்சார வாரியம் அறிவிப்பு!

பொதுமக்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலன் அறிவித்துள்ளார்.


தாராபுரம்: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வீடு, கைத்தறி, பவர் லூம், குடிசை மின் இணைப்புகளின், மின் நுகர்வோர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயமாக இணைக்க வேண்டும்.

தாராபுரம் கோட்டத்தில் 20 மின்சார வாரிய பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்தந்த அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம் ஏற்படுத்தி ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆதார் எண் இணைக்கப்படாத மின் இணைப்புகளுக்கு மின் நுகர்வோருடைய வீட்டிற்கு நேரில் சென்று ஆதார் எண்ணை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

அதே சமயம் அனைத்து மின்நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண் மற்ற விவரங்களை பணியாளர்களிடம் வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...

பண்டிகை காலம்: சென்னை-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அக்டோபர் முதல் நவம்பர் 2026 வரை சென்னை-கொல்லம் இடைய...

EPFO கட்டாய உறுப்பினர் ஊதிய வரம்பு ₹25,000 ஆக உயர்வு

EPFO-வில் கட்டாய உறுப்பினர் சேர்க்கைக்கான மாத ஊதிய உச்சவரம்பு ₹15,000-ல் இருந்து ₹25,000 ஆக செப்டம்பர் 17 முதல் உயர்த்தப...