கோவை மாவட்டம் போதைப்பொருள் இல்லா மாவட்டமாகும் - கிராம மக்கள் உறுதிமொழி

கோவை மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு.


கோவை: கோவை மாவட்டத்தைப் போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்குவோம் என கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.



கோவை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.



அதில் அனைத்து கிராமங்களிலும் போதைப்பொருளுக்கு எதிராக காவல்துறையுடன் இணைந்து ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



அதில் 118 பஞ்சாயத்துக்கு உட்பட்ட 231 கிராமங்களில் போதைப் பொருள் இல்லாத கிராமங்களாக அறிவித்து போதைப் பொருள் இல்லா கிராமம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.



போதைப் பொருட்களுக்கு எதிராக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முன்னெடுப்பின் பேரில் கடந்த ஆண்டு 1821 கஞ்சா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது 1,532 வழக்குகள் பதிவு செய்து 20.14 ஆயிரம் கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட 180 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

184 கஞ்சா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 9 நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 391 நபர்கள் மீது நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டும் நன்னடத்தை பிணையத்தை மீறிய 10 நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆண்டு இதுவரை 73 கஞ்சா மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகள் மீது 63 வழக்குகள் பதிவு செய்து 219.035 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட 05 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 68 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 22 நபர்கள் மீது நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும் நன்னடத்தை பிணையத்தை மீறிய 01 நபர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் போதை மாத்திரைகள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகத் தலைமையகம் மற்றும் ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் போதைப் பொருளை ஒழிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பொதுமக்கள் தயங்காமல் அழைத்திருங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...