தேசிய நூற்பாலைகள் திறக்க வேண்டும்..! - மத்திய அரசுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை

சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், கோவையில் மூடிக்கிடக்கும் தேசிய நூற்பாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய தொழில் வர்த்தக சபை வேண்டுகோள்.


கோவை: கோவையில் இந்திய தொழில் வளர்த்தல் சபை கூட்ட அரங்கில் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



அமைப்பின் தலைவர் ஸ்ரீ ராமு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், செயலாளர்கள் கார்த்திகேயன், அண்ணாமலை, துணைத் தலைவர்கள் ராஜேஷ், பி லந்து, துரைராஜ், சுந்தரம், பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள் வனிதா மோகன் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கோவை தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தர, மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசு வாட் வரிவிதிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கோவை விமான நிலையத்தை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரயில் திட்ட பணிகள் மேம்படுத்தவும், எல் அண்ட் டி பைபாஸ் சாலையை விரிவாக்கவும், மதுக்கரை பாலக்காடு சாலை மரப்பாலம் பகுதியிலிருந்து விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக விரோத செயல்கள் தடுக்க கோவையில் உள்ள தேசிய பஞ்சாலை மில்கள் மூடி கிடப்பதை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை கோவை மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்திடம் தொழிலதிபர்கள் கேட்டுக்கொண்டனர்.



இதற்கு பதிலளித்துப் பேசிய எம்.பி. சண்முகசுந்தரம், கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை மத்திய அரசுடன் பேசி தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...