உடுமலை அருகே சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து கிராம மக்கள்

குடிமங்கலம் அருகே சலங்கை மாடுகளுக்குப் பொதுமக்கள் பால், பழம் வைத்து பூஜை செய்து வழிபாடு.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமங்கள் தோறும் இசைக்கேற்ப ஆடும் சலங்கை மாடுகளுக்குக் கிராம மக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இசை கேட்ப ஆடும் வகையில், மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, கோவிலுக்குச் சொந்தமானது என்பதைக் குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்ற குறிகள் காணப்படுகின்றன.

மாட்டுப்பொங்கல் அன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளைக் கையில் வைத்து ஆள் கொண்ட பால கோவிலுக்குக் கொண்டு சென்று ஆடுகின்றனர்.



பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்குக் கொண்டு வந்து பொதுவான இடத்தில் அல்லது கோவில் பகுதியில் வைத்து பால், பழம் பொங்கல், வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்கள் தொடர்ந்து பாடும் பொழுது சலங்கை மாடு தானாகவே சென்று பால், பழம், பொங்கலைச் சாப்பிடுவது சிறப்பாகக் கருதப்படுகின்றது.



உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் குடிமங்கலம் அருகே பண்ணைக்கிணற்றில் கிராம மக்கள் பொதுஇடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...