உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை

உடுமலை- மூணாறு சாலையில், யானைகள் சுற்றி வருவதால் அவற்றை தொந்தரவு செய்தால் அபராதம் உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை.


திருப்பூர்: மூணாறு செல்லும் சாலையில் யானைக்கூட்டங்கள் குட்டிகளுடன் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகளை அவைகளைத் தொந்தரவு செய்யாமல் பாதுகாப்பாகப் பயணம் செய்ய வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. இங்கு உள்ள உடுமலை உட்பட 4 வனச்சரக பகுதியில், யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வசிக்கின்றன.

குறிப்பாக அமராவதி வனச்சரக பகுதியில் உடுமலை- மூணாறு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த வழியே பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அதிகளவு இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.



மலைப்பகுதிகளில் உள்ள உடுமலை- மூணாறு சாலை, சின்னாறு, எஸ். வளைவு, யானைக்காடு உள்ளிட்ட சாலையின் பல்வேறு பகுதிகளில், காலை மற்றும் மாலை நேரங்களில் ஆங்காங்கே குட்டிகளுடன் யானைக் கூட்டங்கள் தென்படுகின்றன.



இதனால், இந்த வழித்தடத்தில் செல்வோர் அவற்றை ரசித்துச் செல்கின்றனர். இதில் ஒரு சிலர், அவற்றை அச்சுறுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.



இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: சோதனைச் சாவடிகளில், வாகனங்களை அனுமதிக்கும் போது, யானைகள், வன விலங்குகளைக் கண்டால், அவற்றுக்குத் தொல்லை கொடுக்காமல், பாதுகாப்பாக தூரத்தில் காத்திருக்க வேண்டும் அல்லது வனத்துறை சோதனைச்சாவடிக்கு திரும்ப வந்து விட வேண்டும்.

மேலும் அவை, வனத்திற்குள் சென்றதை உறுதி செய்த பிறகே, சாலையைக் கடக்க வேண்டும் என அறிவுறுத்தி வருவதோடு, இந்த சாலையில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வன விலங்குகளுக்குத் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது, அபராதம் உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...