பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்


காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் அ.தி.மு.க  வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் விடுதியருகே செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிக்கியாளர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், பத்திரிக்கையாளர்களின் செல் போன்கள் மற்றும் காமிரா உள்ளிட்ட உபகரணங்களையும் பிடுங்கிச்சென்றனர். 

இதை தொடர்ந்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளகள் இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

 

பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று அனைத்து பத்திரிக்கையாளர்கள் கூட்டமைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீப காலமாக பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



தொடர்ந்து, அனைத்து பத்திரிக்கையாளர்களிடமும் கையொப்பம் பெறப்பட்டு, அத்தோடு கடிதத்தை இணைத்து அதை தமிழக கவர்னருக்கு அனுப்ப உள்ளதாகவும் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...