பவானி ஆற்றில் இறங்கி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

பவானி ஆற்றினை திசை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்.


கோவை: திருப்பூர் மாநகராட்சிக்கு சுமார் 840 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33வார்டு பகுதி மக்களுக்கும் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சாமன்னவாட்டர் ஹவுஸ் பகுதியில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குத் தண்ணீர் எடுக்கும் இடம் அருகே தற்போது திருப்பூர் மாநகராட்சிக்கு சுமார் ரூ.840 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அப்படி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பவானி ஆற்றிலிருந்து அதிகளவில் இந்த திட்டத்திற்குத் தண்ணீர் எடுக்க ஆற்றின் குறுக்கே பாறாங்கற்கள் கொண்டு ஆற்றினையே அதிகாரிகள் திசைமாற்றி விட முயன்றுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இதற்காக எந்த அனுமதியும் பெறாமல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், ஏற்கனவே கடந்த 60 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் மக்களுக்குக் குடிநீர் வழங்கி வரும் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டத்திற்குத் தண்ணீர் எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டு தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.

இந்நிலையில் தண்ணீர் வினியோகம் குறித்து ஆய்வு செய்த போது ஆற்றினை திசை மாற்றியிருப்பது தெரியவந்தது.



இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் அதிமுக கவுன்சிலர்கள், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்தும், இதனைக் கண்காணிக்கத் தவறிய மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரைக் கண்டித்தும் திருப்பூர் மாநகராட்சிக்குக் குடிநீர் எடுக்கும் இடத்தில் பவானி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் பவானி ஆற்றினை திசைமாற்ற முயற்சிக்கும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்தும், பொதுமக்களின் குடிநீர் வழங்கலில் அக்கறையின்றி நகராட்சி ஆணையாளர் செயல்படுவதாகக் கூறி கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரீபாபர்வின் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் உடனடியாக திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக ஆற்றினை திசை மாற்றக் கூடாது எனக் கூறி கண்டித்து நிலையில் உடனடியாக ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பவானி ஆற்றில் அமைத்த கற்குவியலை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...