கோத்தகிரி சாலையில் உலா வந்த கரடி - பொதுமக்கள் அச்சம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிரபல புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு செல்லும் சாலையில் கரடி நடமாடிய சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் அவ்வப்போது உலா வருவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு செல்லும் சாலையில் கரடி ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது. சிறிது தூரம் சாலையிலேயே நடந்து சென்ற கரடி, பின்னர் அருகிலிருந்த புதருக்குள் சென்று மறைந்தது.



சாலையில் கரடி நடமாட்டத்தைக் கண்ட வாகன ஓட்டிகள், அச்சத்தில் சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி, கரடியை தங்களது செல்போனில் படம்பிடித்தனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த கரடி நடாமாட்டக் காட்சிகளைப் பார்த்த குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், சாலைகளில் அடிக்கடி நடமாடும் கரடி, பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோத்தகிரிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...