பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி - கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குவிந்ததால் அப்பகுதியே களைகட்டியது.



கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ம் தேதி மகாசங்கராந்தியும், ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 17ம் தேதியான இன்று காணும் பொங்கல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடற்கரை, பூங்காக்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதே காணும் பொங்கல் தினச் சிறப்பு.



அந்த வகையில், காணும் பொங்கல் தினத்தையொட்டி கோவையில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.



குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் உறவினர்கள், நண்பர்களுடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



பின்னர், தாங்கள் கொண்டுவந்திருந்த இனிப்புகள், உணவுப் பண்டங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு காணும் பொங்கல் தினத்தை உற்சாகமாக் கொண்டாடினர்.



பொங்கல் விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் கோவைக் குற்றாலத்தில் குவிந்ததால் நுழைவுச் சீட்டு பெறுவதற்கு பல மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



மக்கள் கூட்டத்தையொட்டி, கோவை குற்றாலம் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Newsletter

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...