டாப்சிலிப் யானை முகாமில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும், வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் படி இந்தாண்டு கோழி கமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யானை பொங்கல் விழாவில் காலை யானைகளைக் குளிப்பாட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



பின்னர் மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தனர். யானைகளுக்குப் பிடித்த உணவான கரும்பு வாழை, மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசிச் சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகளிடம் கேட்டபோது, "வழக்கமாகப் பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடுவோம். ஆனால் யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம்.

இங்கு ஒரே இடத்தில் 20-க்கும் மேற்பட்ட யானைகளை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி. வனத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் யானைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது.

அந்த வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள வனத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்,குடும்பத்துடன் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Newsletter

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...