கோவை கோனியம்மன் கோவிலில் நாளை புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா


கோவை மாவட்டம், பெரியகடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவையின் மையப்பகுதியிலும், மாவட்டத்திற்கே பிரசித்தி பெற்றதாகவும் அமைந்துள்ளது. 

இக்கோவிலுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்துசெல்வர்.

தற்போது, கோனியம்மன் கோவிலில் நாளை பிப்ரவரி 13ம் தேதியன்று புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா கொண்டாடப்பட உள்ளது.

நாளை காலை 7 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ள இச்சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்க அக்கோவிலின் நிர்வாகத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோனியம்மன் கோவிலில் வரும் 21.02.2017 முதல் 6.03.2017 தேதி வரை வருடாந்திர திருவிழாவும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...