பன்னீர் தயாரிப்பில் களமிறங்கும் கோவை ஆவின் - சிம்பிளிசிட்டி எக்ஸ்குளூசிவ்

கோவையில் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனம் பன்னீர் தயாரிப்பில் களம் காணத் திட்டமிட்டுள்ளது. நடப்பு மாதம் முதல் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் பன்னீர் தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது.


கோவை: பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் "ஆவின்"

கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட் எனப்படும் ஆவின் நிறுவனம் பேரூர் பச்சாபாளையத்தில் இயங்கி வருகின்றது. ஆர்.எஸ்.புரத்தில் இதன் விற்பனைப்பிரிவு அலுவலகம் உள்ளது. இந்நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பால் வழங்கும் உறுப்பினர்கள் 8000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.



பால் உற்பத்தியாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை நேரடியாக நுகர்வோருக்கு சென்று சேர்க்க முடியாத நிலையில் நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் பாலமாக ஆவின் நிறுவனம் இயங்கி வருகின்றது.



நேரடியாக பால் விற்பனை செய்வதையும் கடந்து, பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்புகள் உள்ளிட்ட இதர பொருட்களையும் விற்று பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் அரணாக ஆவின் விளங்கிவருகிறது.

நாள் ஒன்றுக்கு 2 மெட்ரிக் டன் பன்னீர் உற்பத்தி செய்ய திட்டம்

கோயம்புத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நடப்பு மாதம் முதல் பன்னீர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை ஆவினில் பன்னீர் தயாரிக்க ஆவின் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.10 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தி பன்னீர் தயாரிக்க தேவையான நவீன இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன. நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆட்டோமேட்டிக் மிஷின் மூலம் பன்னீர் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு இரண்டு மெட்ரிக் டன் பன்னீர் தயாரிக்கவும் கோவை ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் "ஆவின்"

பன்னீர் தயாரிப்பதற்கான அடிப்படை மூலப் பொருள் பால் ஆகும். ஆயிரம் லிட்டர் பாலை வைத்து 140 கிலோ பன்னீர் தயாரிக்க முடியும் . இந்த நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு மெட்ரிக் டன் பன்னீர் உற்பத்தி செய்ய, சுமார் 14 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. கோயம்புத்தூர் ஆவினுக்கு தற்போது நாளொன்றுக்கு 8000 முதல் 9000 லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் நிலையில், வழக்கத்தைவிட தோராயமாக இரண்டு மடங்கு கூடுதலாக பால் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.

இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையின் பேரில், ஆவினுக்கான பால் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும். அதுமட்டுமின்றி கால்நடைகளில் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, வேளாண் தொழில் வளமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோயமுத்தூர் ஆவின் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...