தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழகம், தமிழ்நாடு என்று வார்த்தை பயன்பாடு, சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



இதில் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முற்போக்கு வழக்கறிஞர்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் தண்டபாணி, அருள்மொழி, மயில்வாகனம், சுந்தரமூர்த்தி, சிவன் ஞானம் ,சிவகாமி தமிழன், ஜோதி குமார் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.



அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் வழக்கறிஞர்களும் திரளாக கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் தண்டபாணி கூறியதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்துகொள்ள தவறிவிட்டார். ஆளுநர் தமது விருப்பம்போல் சனாதனம், பார்ப்பனியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோசமான எடுத்துக்காட்டான நடவடிக்கையை நடத்தியிருக்கிறார்.

கடந்த ஒரு வருடமாகவே ஆளுநரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் தமிழ் இனத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானதாகவே இருந்துவருகிறது. சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகியும் நாட்டிற்கு சனாதனம்தான் தேவை என்று ஆளுநர் கூறிவருகிறார்.

ஆளுநரின் இத்தகைய போக்கைக் கண்டித்தும், ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை மத்திய அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு, விரைவில் தமிழ்நாட்டிற்கான ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பதுதான் மக்களின் அடிப்படையான கோரிக்கை.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...