பணி நிரந்தரம் செய்யுங்கள்..! - உதகை தாவரவியல் பூங்கா முன்பு தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் போராட்டம்

உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு தோட்டக்கலைத்துறை பூங்காக்கள் மற்றும் அரசு பண்ணைகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா உள்ளிட்ட அரசு பூங்காக்கள் மற்றும் குன்னூர் பழபண்ணை, நஞ்சநாடு பண்ணை உள்ளிட்ட 14 தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் 700-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இவர்களுக்குத் தினக் கூலியாக நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் மட்டுமே பெற்று பணப் பலன்கள் இன்றி பணியாற்றி வருகின்றனர்.



இதனையடுத்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி பணப் பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் ஊக்கத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும், காலியாக உள்ள இடங்களைத் தற்காலிக பணியாளராக உள்ள தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப நிரப்ப வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு நிதித்துறை ஆணைபடி தற்போது உள்ள தொழிலாளர்களைப் பண்ணை பணியாளர்களை அங்கீகாரிக்க வேண்டும்.



உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு பூங்கா மற்றும் பண்ணை தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தமிழக அரசு உடனே தங்களது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...