கோவை சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவி தேர்தல் - மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

கோவை மாவட்டம் பெரியநாயகன்பாளையம் ஒன்றியம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில், கோவை மாவட்டம் பெரியநாயகன்பாளையம் ஒன்றியம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற சுதா, 2553 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 3 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலரால் அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 15 நாட்களுக்குள் 30-12-2019 அன்று நடந்த சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நடத்த உரிய அதிகாரிகளை நியமிக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

மேலும், மறு வாக்கு எண்ணிக்கையை ஒளிப்பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும், மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை கொண்டு அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்ற ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...