கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா - பக்தர்கள் தரிசனம்

கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



கோவை: கோவையின் புகழ்பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 28ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கியது.

பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் முதல் 9 நாட்களும் காலையும் மாலையும் திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. ஒன்பதாவது நாளான நேற்று இரவு கிளி வாகன சேவை, அன்னூஞ்சல் நடத்தப்பட்டது.



இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மார்கழி பூஜை செய்யப்பட்டது, தொடர்ந்து 4:15 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு 30 வகையான மங்கள திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு ஆருத்ரா தரிசன காட்சி நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பேரூரில் குவிந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குவிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...