திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23,26,486ஆக உள்ளது

திருப்பூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வினீத் இன்று வெளியிட்ட நிலையில், அதன்படி, ஆண் வாக்காளர்கள் - 11,44,309 , பெண் வாக்காளர்கள் - 11,81,334 , மூன்றாம் பாலினத்தவர் - 334 என தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், அவிநாசி, திருப்பூர் தெற்கு, வடக்கு உள்ளிட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் வினீத் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.



இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 44 ஆயிரத்து 309 பேர் என்றும் பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 81 ஆயிரத்து 843 பேர் எனவும் மூன்றாம் பாலினத்தவர்கள் 334 பேர் என மொத்தம் 23 லட்சத்து 26 ஆயிரத்து 486 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.



கிராமம் மற்றும் நகர்புறங்களில் 18 வயது நிரம்பிய இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் அரசியல் கட்சியினரும் இளைஞர்களை அதிகளவு வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது, “வோட்டர்ஸ் ஹெல்ப் லைன்” (voters helpline) என்ற செல்போன் செயலி மூலமாகவோ பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...