கழிவுப்பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் தொடரும் நெருக்கடி

கழிவுப் பஞ்சு விலை உயர்வால் நூல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் முதல் தர கழிவுப் பஞ்சு மூலம் ஓபன் எண்ட் (ஓஇ) மில்களில் நூல் தயாரித்து, ஜீன்ஸ், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பஞ்சு விலை குறைந்த போதும் கழிவுப் பஞ்சு விலையை நூற்பாலை நிர்வாகத்தினர் குறைக்காததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு ஓபன் எண்ட் கழிவுபஞ்சு நூற்பலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “முதல் தர கழிவுப் பஞ்சு (கோம்பர் நாயில்) ரூ.140-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. இன்று பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.60 ஆயிரமாக உள்ள நிலையில் கழிவுப் பஞ்சு விலை ஒரு கிலோ ரூ.80-க்கு கிடைத்தால்தான் ஏற்புடையது.

நூற்பாலை தொழில்துறையினரின் இந்த நடவடிக்கையால் கழிவுப் பஞ்சு தொழில், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட ஜவுளிச் சங்கிலி தொடரிலுள்ள பல தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜவுளித்தொழிலில் எந்த ஒரு குறிப்பிட்ட துறை மட்டும் அபிரிமிதமான லாபத்தை ஈட்டி மற்ற தொழில்களை பாதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் நூற்பாலை நிர்வாகத்தினர் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை”என்றார்.



மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “கடந்த 1984-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பஞ்சு விலையில் 45 முதல் 50 சதவீதம் வரை தான் கழிவுபஞ்சு விற்பனை செய்யப்பட்டது. இன்று பஞ்சு விலையில் 75 முதல் 80 சதவீதம் வரை கழிவுப்பஞ்சு விலை உள்ளது. கழிவுப் பஞ்சு நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூல் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆடை தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

விலை ஏற்றத்தால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுடன் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இதை பயன்படுத்தி ஜவுளிப்பொருட்களை அதிகளவு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. எனவே கழிவுப் பஞ்சு நியாயமான விலையில் கிடைக்க நூற்பாலை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

நூற்பாலை தொழில்துறையினர் கூறும்போது, “பஞ்சு விலையில் நிலவும் நிலையற்ற தன்மையால் நூற்பாலைகள் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனைக்கு வரும் முதல் தர கழிவுப் பஞ்சின் அளவு 40 சதவீதம் வரை குறைந்துள்ளது” என்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...