உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் பிரதமரின் தாயார்- வானதி சீனிவாசன் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

கோவை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

"நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தாயார் இன்று காலை இறைவன் திருவடி சேர்ந்தார். உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் சுயநலமற்ற தூய்மையான எளிமையான வாழ்க்கையை கடைபிடித்து நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தியாகத்திலும் தேசப்பற்றிலும் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கும் அவரது வாழ்க்கை இந்திய பெண்களுக்கு உதாரணமானது.

அவரது மறைவிற்கு பாஜக மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதைக்குரிய நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மன ஆறுதலை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...