வேளாண் பல்கலைக்கழகத்தில் பண்ணை இயந்திரவியல் கண்காட்சி


கோவையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் கண்காட்சியாக வேளாண்மைக்கு தேவையான இயந்திரவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 



இந்த கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தயாரித்த பல்வேறு இயந்திரங்கள் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் வேளாண் துறையை இயந்திர மயமாக்குவதற்கும், மனித சக்தியை அதிகம் செலவிடாமல் முழுக்க முழுக்க இயந்திரங்களை கொண்டே விவசாயம் செய்ய ஏதுவாக பல இயந்திரங்கள் கண்காட்சிக்கு வைக்கபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். 







இந்த கண்காட்சி குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், 'நான் சேலம் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். எனக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தற்போது வாழை பயிரிட்டுள்ளேன், வேளாண் அறிவியல் மையம் சார்பில் எங்களை இந்த கண்காட்சிக்கு அழைத்து வந்தனர். மண் கட்டிகளை பொடியாக்கும் இயந்திரத்தை வாங்குவதற்காக இங்கு வந்துள்ளேன். கட்டியான மண்ணில் விவசாயம் செய்வதை விட, பொடியாக இருக்கும் மண்ணில் விவசாயம் செய்யும் போது மகசூல் அதிகரிக்கும். இக்கண்காட்சியில் அந்த வகையிலான பல இயந்திரங்கள் உள்ளன. மிகவும் உபயோகமாக உள்ளது இக் கண்காட்சி'

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...