'அதிமுக உட்கட்சி பிரச்சனையில், மற்ற கட்சிகள் தலையிட முடியாத சூழல் உள்ளது' ம.ஜ.க கோவை மாவட்ட செயலாளர்.


அதிமுக கட்சியின் நிலைபாடு குறித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி  சிம்ப்ளிசிட்டி'க்கு அளித்த சிறப்பு பேட்டியில், மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் கூறுகையில்:

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது, அதற்கு மற்ற கட்சிகள் தலையிட முடியாத சூழல் உள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சி பொறுத்தவரை மாநில தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கேற்பதான் முடிவு செய்ய முடியும். அதிமுக கட்சியின் பொது செயலாளர் சசிகலாவிற்கு தற்போது மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், தமிழகத்திற்கு முதலைவராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டால் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதன் மூலம் மக்களின் எதிர்ப்பில் இருந்து விடுபடலாம். உதாரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி தமிழகத்தில் படிப்படியாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதை சசிகலா பதவியேற்றால் முழுமையாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற நல்ல முயற்சியை செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. 

தற்போது கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் அதிமுக பொது செயலாளர் சசிகலா தமிழகத்திற்கு முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சசிகலா தமிழக முதல்வராக பதவி வகித்தால் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...