முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார்..!

ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், துறை ரீதியாகவும், தொகுதியில் சாலை, நிழற்குடை அமைத்ததாக கூறி பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், வீரமணி, உள்ளிட்ட அமைச்சர் மீது முறைகேடாக டெண்டர் ஒதுக்கீடு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் கால்நடை துறை மற்றும் அரசு கேபிள் நிறுவன துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன் மீது பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பேசியதாவது, கடந்த ஆட்சியில் பல்வேறு அமைச்சர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர், அதற்கான ஆதரங்களுடன் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆட்சியில் கால்நடை துறை அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், துறை ரீதியிலும், தொகுதி சார்ந்த சாலை, நிழற்குடை அமைத்ததாக கூறி பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்,

இதற்கான கள ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் செய்து முடித்த பணிகளை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். அவரது சொத்து கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...