குன்னூர் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு எருமையால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவின் அருகே இன்று திடீரென நுழைந்த காட்டு எருமை அப்பகுதியை சுற்றி வலம் வந்தது. 



தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த புற்கள் மற்றும் குப்பைகளை உண்ட காட்டெருமை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை வனவர் சவுந்தராஜன், பாபு, காவல் துறையை சேர்ந்த ரவி ஆகியோர் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் அதனை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

நீலகிரி வனப் பகுதியில் மழை பொய்த்துப்போய் வறட்சி நிலவிவருவதால் நீர், உணவு உள்ளிட்டவற்றைத் தேடி தற்போது அதிகளவிலான காட்டெருமை, மான், சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. 

மேலும், தற்போது கோடை காலமும் துவங்கவுள்ள நிலையில் அதிகளவிலான காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழையலாம் எனவும், இதனால் மனித- விலங்கு மோதல் ஏற்படும் எனவும், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வனவிலங்குகளுக்கு தகுந்த நீராதாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...