கோவை பவானி ஆற்றுப்படுகையில் 9-ஆம் ஆண்டு யானைகள் நலவாழ்வு சிறப்பு முகாம் இன்று தொடக்கம்


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப்படுகையில் 9-ஆம் ஆண்டு யானைகள் நலவாழ்வு சிறப்பு முகாம் இன்று தொடங்கியது, இதில் திருக்கோவில் மற்றும் மடத்தினைச் சேர்ந்த 30 யானைகள் கலந்துகொண்டு உற்சாகம் அடைந்துள்ளன.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்  வட்டம் தேக்கம்பட்டியில் இன்று இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் 9-ஆம் ஆண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடக்கவிழா நடைபெற்றது. 

இம்முகாமினை இந்துசமய அறநிலையங்கள் துறை ஆணையர் எம்.வீரசண்முகமனி சிறப்பு முகாமினை துவக்கி வைத்து யானைகளுக்கு கரும்பு, பழங்கள் கொடுத்ததுடன் இம்முகாம் குறித்து தெரிவித்ததாவது:-

தமிழக அரசின் சீரிய  திட்டங்களில் ஒன்றான யானைகள் புத்துணர்வு பெறும் விதமாக நல்வாழ்வு சிறப்பு முகாம் அமைத்து யானைகளுக்கு உடல்நலம் மனநலம் குறித்து சீராக்கிடும் விதமாக புத்துணர்வு முகாம் ஒவ்வொரு ஆண்டும் இதே மாதம் துவக்கப்பட்டு சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் இந்த ஆண்டு இன்று யானைகளுக்கான சிறப்பு முகாம் துவங்கி 10.03.2017 வரை நடைபெறுகின்றன. இன்றைக்கு 30 திருக்கோயில்களிலிருந்து யானைகள் வரப்பெற்றுள்ளது. மேலும் 4 யானைகள் வரவுள்ளன. 

 

மேலும், இந்த முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு அவல், மஞ்சள், உப்பு, பெருங்காயம், பேரிச்சைபழம், அச்சுவெல்லம், அரிசி, கொள்ளு, பச்சைபயிறு, பசுந்தீவனம் ஆகிய சத்துள்ள சரிவிகித உணவு வகைகள், பழங்கள், கரும்பு, போன்ற உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றது.

யானைகள் நோயினால் தாக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அலுவலர்கள் அடங்கிய குழு மூலம் கண்காணிக்கப்படும். 

யானைகளுக்கு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. யானை பாகன்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் யானைகளுக்கும், யானைப்பாகன்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இம்முகாமில் கலந்து கொள்ளும் யானைகளின் பாதுகாப்பினை கருதி சோலார் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், துல்லியமாக கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி கேமரா, உயர் கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.   

வனத்துறையின் மூலம் வனத்துறை அதிகாரிகள் 7 குழுக்களாக அமைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் யானைகளை பராமரிக்க யானை பாகன்களுக்கு பராமரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

யானைகளை குளிப்பாட்டுவதற்கான ஷவர் பாத் மேடை போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில் யானைகளுக்கு மருத்துவ பரிசோனை மட்டுமின்றி உடற்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தச் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள இயலாத உடல் நலம் குன்றிய யானைகளுக்கு தங்கும் இடத்திலேயே இதேபோல் சிறந்த உணவு மருத்துவ சிகிச்சை, உடற்பயிற்சி வழங்கிட உத்திரவிடப்பட்டுள்ளது.

இதன் நோக்கம், உடல் நலம் மட்டுமின்றி மனநலத்தினையும் சீராக்குவதேயாகும். அதேபோல் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு திரும்ப செல்லும் யானைகள் முழுமையாக புத்துணர்வு பெற்றுச் செல்லும் இப்பணிகளை வனத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகின்றனர் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ம.வீரசண்முகமனி தெரிவித்தார். 

இவ்விழாவில் மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் தமிழ்செல்வன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், கால்நடைத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...