கோவையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - 45 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் கல்பனா

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 45 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை:கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ இன்று (13.12.2022) நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்‌ மேயரிடம்‌, மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 45 பேர் கோரிக்கை மனுக்களை மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் அளித்தனர்‌.

இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய மின் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.

இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 8 மனுக்களும்‌, 6மற்கு மண்டலத்தில்‌ 14 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 5 மனுக்களும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 4 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 10 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 4 மனுக்களும்‌ என மொத்தம்‌ 45 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

இந்த கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இக்கூட்டத்தில்‌, மண்டல உதவி ஆணையர்கள்‌ அண்ணாதுரை, மோகனசுந்தரி, சேகா்‌, முத்து இராமலிங்கம்‌, மகேஷ் கனகராஜ்‌ (பொ), உதவி ஆணையர் (வருவாய்‌) செந்தில் குமார் ரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தரராஜ்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலாகள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்‌.

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...