ஈஷா சார்பில் 5,000 சிறை கைதிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவும் வகையில் சிறப்பு யோகா வகுப்பு

தமிழகம் முழுவதும் சிறைகளில் ஈஷா யோகா மையம் சார்பில் கடந்த 3 மாதத்தில் சுமார் 5,000 கைதிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சிகள் வழங்கி, நல்வழி படுத்தியதாக ஈஷா அமைப்பு அறிக்கை.


கோவை: ஈஷா யோகா மையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறையில் உள்ள கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் கடந்த 3 மாதத்தில் 5,000 கைதிகளுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈஷா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.



சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், கடலூர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மத்திய, மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் (Sub jails) இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் சிறைகளுக்கு நேரில் சென்று ‘உயிர் நோக்கம்’, ‘சூரிய சக்தி’, ‘உப யோகா’ ஆகிய யோகா பயிற்சிகளை கற்றுக் கொடுத்தனர்.



இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வகுப்புகள் பல சிறை கைதிகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சிறைகளில் வகுப்பு எடுத்த ஈஷா யோகா ஆசிரியர்கள் கூறியதாவது, கடலூர் சிறையில் யோகா வகுப்பு நடத்தும் போது 19, 20 வயது மிக்க இளைஞர்கள் சிலர் விருப்பமின்றி முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்டனர். ஆனால், 3-வது நாள் வகுப்பு முடித்த பிறகு அதற்கு முற்றிலும் நேர் எதிராக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.



இது போன்ற யோகா வகுப்பில் நாங்கள் முன்பே கலந்து கொண்டு இருந்தால் இப்படி சிறைக்கு வந்திருக்க மாட்டோம். பரவாயில்லை. இப்போதாவது இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நாங்கள் வெளியில் சென்ற பிறகு மீண்டும் எவ்வித குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது இந்த வகுப்பு எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளனர்.

அதேபோல் மற்றொரு கைதி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது, ன் பெயிலுக்கு விண்ணப்பித்து இருந்தேன். எல்லா நாட்களும் எப்போது பெயில் கிடைக்கும் என்று ஏங்கி கொண்டு இருந்த நான், முதல் நாள் வகுப்பு முடித்த பிறகு இவ்வகுப்பு முடிவதற்கு முன் பெயில் கிடைத்து விடக்கூடாது என கடவுளிடம் வேண்டி கொண்டேன்.

ஏனென்றால், நான் வெளியில் இருந்து இருந்தால் இதுபோன்ற வகுப்பில் கட்டாயம் கலந்து கொண்டு இருக்க மாட்டேன். நான் வேண்டி கொண்டபடியே பெயில் கிடைக்கவில்லை. 3 நாள் வகுப்பை நான் முழுமையாக நிறைவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.

இவ்வாறு யோகா ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1992-ம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக இதுபோன்ற சிறை வகுப்புகளை ஈஷா நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 40,000 சிறை கைதிகள் இவ்வகுப்புகளால் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு ஈஷா யோகா மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...