கழிவு பஞ்சு விலை உயர்வால் தமிழகத்தில் 600 மில்கள் உற்பத்தி பாதிப்பு - விலையை குறைக்க தொழில்துறையினர் கோரிக்கை

கழிவு பஞ்சு விலை ஒரு கிலோ ரூ.150ஆக உயர்ந்துள்ளதால் தமிழகத்திலுள்ள 600 ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.


கோவை: கழிவு பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணிகள் ஓபன் எண்ட்(ஓஇ) மில்களில் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் இதுபோன்ற 600 ஓஇ மில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பஞ்சு விலை ஒரு கேண்டி (356 கிலோ) ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மறுபுறம் கழிவு பஞ்சின் விலை ஒரு கிலோ ரூ.150ஆக அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள ஓஇ மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது, கடந்த ஒரு மாதத்துக்கு மேல் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.70,000 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம் ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சின் விலை ஒரு கிலோ ரூ.125-ல் இருந்து படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ.150ஆக உயர்ந்துள்ளது. ஸ்பின்னிங் நூற்பாலைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதை நாங்கள் நன்கு அறிவோம்.

இருப்பினும் விலை உயர்வால்

ஜவுளி சங்கிலி தொடரிலுள்ள ஓபன் எண்ட் மில்கள், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலை நீடித்தால் எதிர்வரும் காலங்களில் ஓஇ மில்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும்.

ஏற்கெனவே ரூபாய் நோட்டு பயன்பாடுக்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி திட்டங்களை அரசு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கழிவு பஞ்சு நுகர்வு குறையலாம். ஆனால் எப்போதும் நுகர்வு செய்யும் தன்மை கொண்ட ஓஇ மில்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கழிவுபஞ்சு விலையை குறைக்க ஸ்பின்னிங் நூற்பாலைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது, ஆயத்த ஆடைகளுக்கு மட்டும் ஸ்பின்னிங் நூற்பாலைகள் நூலை வழங்குவது இல்லை. விசைத்தறிகளில் பயன்படுத்தப்படும் வார்ப்பு நூலையும் உற்பத்தி செய்து வழங்குகின்றனர்.

கழிவு பஞ்சு விலையை ஒரு கிலோவுக்கு ரூ.30 குறைத்தால் வார்ப்பு நூலின் தேவை அதிகரிக்கும். தவிர ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலின் விலையும் குறையும்.

இதனால் கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலில் இருந்து ஓரளவு மீள வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்..

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...