கோவை முழுவதும் நள்ளிரவு முதல் தொடர் மழை - மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை மாவட்டம் முழுவதும் நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலவும் மூடுபனியால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.



கோவை: கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.



அதன்படி, நள்ளிரவு முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், ஆர்.எஸ்.புரம், மற்றும் சூலூர், பேரூர் என பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனிடையே பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான மூடுபனி இருந்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

இந்நிலையில் இன்று பெரும்பாலான பள்ளிகளில் அரை இறுதி தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தவாறு பள்ளிகளுக்கு சென்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...