கோவையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.93.74 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை 30 மாற்றுத்திறனாளிகள், 46 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1,120 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.



கோவை: கோவை மாவட்டத்தில் சூலூர், பன்னீர்மடை மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 93 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.



இந்த குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு, கோவையை சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 46 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1120 பேருக்கு வழங்கினார்.



மேலும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் வீடு கட்டிக் கொள்ள ஆயிரம் பயனாளிகளுக்கு 21 கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஆணையும் இன்று வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச் செல்வன் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...