டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்த கோரி அந்நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகை

கோவையில் டாக்சி ஓட்டுனர்கள் வாடகை கட்டணத்தை அதிகப்படுத்தி வழங்க கோரி தனியார் டாக்சி ஓட்டுனர்கள் அண்ணா சிலை அருகில் உள்ள அந்நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்ட்த்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் உபர் என்னும் பெயரில் தனியார் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவையில் இந்த நிறுவனத்துடன் இணைந்து  இரண்டாயிரத்துக்கும் அதிகமான டாக்சி உரிமையாளர்கள் கால் டாக்சி ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு வழங்கப்படும் வாடகை கட்டணத்தை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையையும் குறைத்துள்ளது. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் கோவை அண்ணா சிலை அருகில் உள்ள உபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்டண மாற்றம் குறித்த தங்கள் முடிவை நிர்வாகம் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், ஊக்க தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும் எனவும் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...