உலக மண் தினம்: மக்கள் தொடர்ந்து மண் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் - பெங்களூருவில் சத்குரு ஜக்கி வாசுதேவ்

உலக மண் தினத்தையொட்டி பெங்களூருவில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் #ScoreForSoil என்ற பிரச்சாரத்தை தொடங்கிய சத்குரு ஜக்கி வாசுதேவ், ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு மண் அழிகிறது என எச்சரிக்கை விடுத்தார்.


பெங்களூரு: கால்பந்தாட்ட சீசன் நடைபெறும் இவ்வேளையில், உலக அளவில் ஒவ்வொரு 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்; வளமான நிலம் பாலைவனமாகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என உலக மண் தினமான இன்று (டிசம்பர் 5) சத்குரு கூறினார்.

உலக மண் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஈஷா அமைப்பின் மண் காப்போம் இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் ஈஷாவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில், நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர், சத்குரு ஜக்கி வாசுதேவ், #ScoreForSoil என்ற உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

கால்பந்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் வாயிலாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களுடைய சிறந்த கால்பந்தாட்ட வீடியோவை #ScoreForSoil என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம்.

மேலும், அந்த வீடியோவில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது, நாம் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் உலகின் மண் வளத்தை 10 சதவீதம் இழந்துவிட்டோம். எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக நாம் ‘மண் காப்போம்’ இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கினோம்.

இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு உலக அளவில் மண் தொடர்பான பார்வை மாறியுள்ளது. கடந்தாண்டு க்ளாகோவில் நடைபெற்ற COP 26 சுற்றுச்சூழல் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்காற்றும் ‘மண்’ குறித்து யாரும் பேசவில்லை. ஆனால், மண் காப்போம் இயக்கத்தின் பிரச்சாரத்தால் இந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற COP 27 மாநாட்டில் மண் வளம் குறித்த முக்கிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளது.

எனவே, மண் வள மீட்டெடுப்பு கொள்கைகள் உலகளவில் கட்டாயம் உருவாக்கப்படும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எந்த வேகத்தில் நடக்கும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது. எனவே, இந்த வேகத்தை துரிதப்படுத்துவதற்கு மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் மண் குறித்து தொடர்ந்து இடைவிடாமல் பேசி கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பெங்களூருவில் மண் வளப் பாதுகாப்பு தொடர்பான மோட்டார் சைக்கிள் பேரணியிலும் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...