கோவை கங்கா மருத்துவமனையில் முதல் முறையாக ரோபோ மூலம் மூட்டு மாற்று சிகிச்சை அறிமுகம்

புதிய தொழில்நுட்பம் நோயாளிக்கு நவீன சிகிச்சை அளித்து முழங்கால் பிரச்சினைக்கு தீர்வு அளிப்பதோடு, நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய அவசியத்தையும் வெகுவாக குறைப்பதாக கங்கா மருத்துவமனை தெரிவித்துள்ளது.



கோவை: தற்போதைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் துரிதமான வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக பலருக்கு கால் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதில் முழங்கால் கீல்வாதம் என்பது முழங்கால் மூட்டு வீக்கம், வலி மற்றும் விறைப்பு தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இது அன்றாட நடவடிக்கைகளை வெகுவாக பாதிக்கிறது. கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஆகியவை முழங்கால் மூட்டுவலியின் மிகவும் பொதுவான வகைகள் ஆகும்.

கீல்வாதம் என்பது 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அடிக்கடி ஏற்படும் ஒருவிதமான மூட்டு தேய்மானம் ஆகும். இதேபோல் முடக்கு வாதம் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும், இதில் நோய் எதிர்ப்பு அமைப்பானது சாதாரண திசுக்களை சேதப்படுத்துவதுடன் எலும்பை மென்மையாக்குகிறது. இத்தகைய பிரச்சனை இளம் வயதினருக்கு கூட இது ஏற்பட வாய்ப்பு உள்ளது. கீல்வாத பாதிப்பு என்பது ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக உள்ளது.

வயதுக்கு ஏற்ப இதன் பாதிப்பானது மாறுபடுகிறது. வயதானவர்களுக்கு இதன் பாதிப்பானது அதிக அளவில் ஏற்படுகிறது.



இந்நிலையில் கோவை கங்கா மருத்துவமனையில் முதல் முறையாக ரோபோ மூலம் மூட்டு மாற்று சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து கங்கா மருத்துவமனை இயக்குநரும், சர்வதேச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவருமான டாக்டர் ராஜசேகர் தெரிவித்துள்ளதாவது, நோய்களின் பாதிப்பு குறித்து உலகளவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கீல்வாதம் என்பது 50 முதல் 74 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதாகவும், உலகளவில் இரண்டாவது பொதுவான தசைக்கூட்டு பிரச்சினையாக இது இருப்பதும் தெரிய வந்துள்ளதாக கூறினார்.

மேலும் இதன் காரணமாக செயல்பாடுகள் குறைதல், வேலைகளை செய்ய முடியாமை மற்றும் இயலாமை போன்றவை ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கீல்வாத நோய் பாதிப்பு என்பது 60 வயதை கடந்த ஆண்களில் சுமார் 10 சதவீதம் பேருக்கும், பெண்களில் 15 சதவீதம் பேருக்கும் ஏற்படுவதாகவும் இந்தியாவில் 22% முதல் 39% வரை இந்த நோய் பரவலாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் சுமார் ஒன்றரை கோடி முதல் 2 கோடி நோயாளிகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக கூறிய அவர், ஆனால் இதில் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். போதிய விழிப்புணர்வு இல்லாமை, பொருளாதாரம் மற்றும் பல்வேறு காரணங்களால் பலர் அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துவதாக டாக்டர் ராஜசேகர் கூறியுள்ளார்.

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக தற்போது ரோபோ அறுவை சிகிச்சை முறையை தங்கள் மருத்துவமனை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். ரோபோடிக் மூலம் செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது மிகத் துல்லியமாக இருக்கும் என்றும் இந்த சிகிச்சை முடிந்த குறுகிய காலத்திலேயே நோயாளி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறினார்.

மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் எந்தவிதமான வலி மற்றும் பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கும் என்று கூறிய அவர், ரோபோ அறுவை சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இந்த திட்டமிடல் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுவதாக கூறிய டாக்டர் ராஜசேகர், நோயாளியின் உடற்கூறுகளுக்கு ஏற்ப இந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இந்த முறை மூலம் மூட்டுகள் வேகமாக மறுசீரமைக்கப்படுவதுடன் நோயாளியும் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசியாவிலேயே முதல் முறையாக வெலிஸ் ரோபோ சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளதாக கூறிய டாக்டர் ராஜசேகர், வெலிஸ் ரோபோட்டிக் தொழில்நுட்பமானது பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளதாக கூறினார். இதை கம்ப்யூட்டர் மூலம் எளிமையாக கையாள முடியும் என்றும் இதன் காரணமாக சிடி ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் தேவையில்லாத கதிரியக்க சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது இல்லை என்றும் அத்துடன் பணமும் மிச்சமாகும் எனவும் கூறினார்.

இந்த சிகிச்சை நோயாளிகளுக்கு சிறப்பான பலனைத் தரும் என்று கூறிய அவர், இதில் உள்ள புரோஅட்ஜெஸ்ட் சாப்ட்வேர் நோயாளியின் குறிப்பிட்ட தனிப்பயனாக்கப்பட்ட சீரமைப்பு மற்றும் மென்மையான திசு சமநிலையை அனுமதிப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...