கோவை விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்-4 பேர் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 4 பேரை கைது செய்த அதிகாரிகள், 6.5 கோடி ரூபாய் மதப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மறைத்து கொண்டு வரப்படும் தங்க கட்டிகள் சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் அண்மை காலமாக அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 18 பயணிகளின் உடமைகளை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார், கடலூரை சேர்ந்த சங்கர், பரமகுடியை சேர்ந்த ராம்பிரபு, மற்றும் சேலத்தை சேர்ந்த குமாரவேல் ஆகிய நான்கு பேரும் தாங்கள் அணிந்திருந்த உடைகளில் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்ததது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...