கோவை ஆவாரம்பாளையம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்துள்ளதாக டாக்ஸி டிரைவர் புகார்

ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் நிரப்பியுள்ளதாக சித்தா புதூர் பகுதியைச் ரமேஷ் என்பவர் அளித்த புகாரின் பெயரில் போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கார் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவரிடம் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்க்கு 39.90 லிட்டர் அளவில் 4,119 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார். அதன் பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் பொழுது அவரது வாகனம் பாதி வழியில் நின்று உள்ளது.

அங்கிருந்த கார் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு காரை சோதித்த போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருந்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக பெட்ரோல் பங்குக்கு விரைந்து சென்று பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் இருந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் அதற்கு சரியான பதிலை தரவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையிலே ரமேஷ் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் இது குறித்து போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...